அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நாற் குணங்களும் பொருந்திய பெண்களை நமது வீடுகளில் கூடக் காணக் கிடைப்பதில்லை.
தமிழோ இலக்கியமோ கற்பிக்கும் ஆசிரியைகளுக்குக் கூட, பழைய இலக்கியப் புத்தகங்களைப் பரட்டிப் பார்த்தால்தான் புரிகிறது.... மேற்படி நான்கு குணங்களுக்குமான அர்த்தங்கள்.
பொதுவாக, மூன்று தசாப்தங்களுக்கு முன்னைய 1990 காலப்பகுதியோடுதான் இந்த அடையாளங்கள் தொலைந்துபோய் விட்டிருக்கின்றன.
அரிதாரம் பூசிய நாகரிகம்தான் மிதித்துச் சிதைத்தது இந்த நாற் குணங்களையும் என்றாலும் அது மிகையாகாதுதான்.
மட்டுமன்றி,
கைத்தொலைபேசிகள்...
வீதியுலாக்கள்...
தொலைக்காட்சி சீரியல்கள்...
ஃபாஸ்ட்பூட்களின் மோகம்...
உலகக் கல்வியின் ஆதிக்கம்... பணத்தின் மீதான வெறி...
பெண்கள் சமவுரிமை எனப் பலவும்,
பெண்கள், பெண்களாக... மென்மையாக வாழ்ந்த ஆரோக்கியமான, அழகிய சூழல்களை நசித்துப் போட்டிருக்கின்றன.
அந்நிய ஆடவர்களுக்கு முன்பாக, சடுதியாக மாராப்பு நழுவி அல்லது இடுப்புச்சேலை விலகிய தருணங்களில் வியர்த்து விதிர்விதிர்த்துப்போய் அக்னி மிதிப்பதையுணர்ந்து நொந்த அடுக்களைப் பெண்களையும் காண்பது மிக அரிதாகத்தானிருக்கிறது..
இப்போதெல்லாம்
இலக்கியங்களிலும் சரி...
வீதிகளிலும் சரி...
நிரம்பப் பெண்கள் 'ஹபாயா' உடுத்தியும் நிர்வாணமாகத்தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

No comments:
Post a Comment