மஹிந்த வெற்றிப்பெற வேண்டுமானால் சிங்கள பௌத்த வாக்காளர்களான 74 வீத வாக்காளர்களில் (80 இலட்சம் வாக்காளர்கள்) இருந்து 55 இலட்சம் வாக்குகளை அவர் பெறவேண்டும். எனினும் பொதுபலசேனாவுடன் இணைந்து செயற்படுவதால் இது சாத்தியமானதல்ல என்று கருதப்படுகிறது
- மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்
ஊவா தேர்தலில் குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற நிலைப்பாட்டில், யார் என்ன சொன்னாலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியே தீருவேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஆளும் ஐக்கிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளையும் பலவந்தமாக ஊடறுத்து நிலவும் கடும் பிடிவாதம் இது.
இப்போதைக்கு ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம். பொதுத் தேர்தலை நடத்தி மக்களின் நாடி பிடித்துப் பார்ப்போம் என்று ஜனாதிபதிக்கு நெருக்கமான அதேநேரம், ஆளுங்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எத்தனை சொல்லிப் பார்த்தும்….பலனளிக்கவில்லை.
எதிர்வரும் ஜனவரியில் தனது வெற்றியை நோக்கிய விவாதத்தை நேரெதிர் முனையில் நிறுத்துவதே இம்முறை இவர் தரப்பின் நோக்கமாகத் தெரிகிறது.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதோடு மட்டுமன்றி, அதில் மூன்றாவது முறையாகவும் களமிறங்கி ஜெயித்துக் காட்டுவேன் என்கிற அதீத நம்பிக்கையிலும், வீறாப்பிலும் விடாப்பிடியாக காய்களை நகர்த்தி வருகிறார் மஹிந்த ராஜபக்ஷ.
பொது மக்களிடத்தில் மனக்குழப்பத்தை ஏற்படுத்தி, இனவாத மற்றும் அடிப்படைவாத அடிப்படையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலை வென்று ஆட்சியை தம் வசப்படுத்திக் கொள்வதற்கு ஜனாதிபதியுட்பட்ட ராஜபக்ஷ சகோதரர்கள் என்ன விலை கொடுக்கவும் தயங்க மாட்டார்கள் என்றும் ஊகிக்க முடிகிறது.
இதேநேரம், ஊவா தேர்தலின் பின்னடைவு தந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்குள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்கான வழிவகைகளை அறியாமல் ஆளுங்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அல்லாடிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மட்டுமன்றி, கடந்த தேர்தல் காலங்களை விடவும் இம்முறை ஆளுங்கட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருக்கும் ஐ.தே.க.உட்பட்ட எதிர்க்கட்சிகளின் வீரியமும், உற்சாகமும் மட்டுமன்றி, ஆளுந்தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 29 பேரளவில் கட்சி தாவும் வாய்ப்புள்ளதாக வரும் செய்திகள் மஹிந்த தரப்பினரை அச்சம் கொள்ளச் செய்திருக்கிறது.
மஹிந்த தரப்பினர் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து நாட்டின் அரசியல் அமைப்பு, சட்டம், சம்பிரதாயங்கள், நீதித்துறை என அனைத்தையும் புறந்தள்ளி விட்டு சர்வாதிகார வெறியில் நாட்டை ஆட்சி செய்து வருவதாக ஜே.வி.பி தொடர்ந்தும் குற்றம் சாட்டி வருவது ஒருபுறமிருக்க,
ராஜபக்ஷ குடும்பம் தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே, 2015 நவம்பர் மாதத்துக்கு முன்பு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதும், அதில் சட்டத்துக்கு முரணான முறையில் மூன்றாவது முறையாக மஹிந்த போட்டியிட விழைவதுமாகும் என்கிற கருத்து ஜாதிக ஹெல உறுமய உட்பட்ட ஆளும் தரப்பின் சிறு பங்காளிக் கட்சிகளையும் இம்முறை கொஞ்சம் உசுப்பிப் பார்க்கவும் செய்திருக்கிறது.
எதிர்வரும் ஜனவரியில் அவசரமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சட்டரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ, தார்மீக ரீதியாகவோ எந்த அதிகாரமும் இல்லை என்பதை அரசியல் கட்சிகள் உட்பட பொதுமக்களும் புரிந்து கொண்டிருக்கும் நிலையில், அது ஆளுந்தரப்புக்கு பாதகமான விளைவுகளைத் தரும் என்று உணர்ந்திருக்கும் அரசின் பங்காளிக் கட்சிகளும், அதிருப்தியுற்றிருக்கும் முக்கிய உறுப்பினர்களும் என்ன செய்வது? யாரை ஆதரிப்பது என்கிற பீதியில் அல்லாடுவதையும் அவதானிக்க முடிகிறது.
எதிரணி ஜே.வி.பி. எத்தனை விமர்சனங்களை முன் வைத்தும் அசராத மஹிந்தவுக்கு எதிரான முதல் உள் வீட்டுக் கல் இம்முறை ஜாதிக ஹெல உறுமயிடமிருந்தே வீசப்பட்டிருப்பதும் யாரும் எதிர்பார்த்திராத விசேட அம்சமாகும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை மற்றும் விகிதாசார தேர்தல் முறைமைகளில் மாற்றங்களை வேண்டி 07 அம்ச திருத்த யோசனைகளை இம்முறை முன் வைத்திருக்கும் ஜாதிக ஹெல உறுமய, ஜனாதிபதி இவற்றை நடைமுறைப்படுத்தாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து விலகி அவரைத் தோற்கடிப்போம் என பகிரங்கமாக சவால் விட்டிருப்பது எப்போதும் நிகழாததோர் திருப்பு முனைதான்.
இம்முறை, தமிழ், முஸ்லிம் வாக்குகள் தமக்கு சாதகமாக இல்லை என்பதை உணர்ந்திருக்கும் மஹிந்த, பெரும்பான்மை சிங்களவர்களது வாக்குகளைச் சேகரிக்க ஹெல உறுமயவை ஒரு கருவியாகப் பயன்படுத்த எண்ணியிருந்த வேளையிலேயே ரத்ன தேரர் உட்பட்ட ஹெல உறுமயினர் அவருக்கு இவ்வாறு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள்.
இது தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்ற ஹெல உறுமயவுடனான சந்திப்பின்போது மஹிந்த கடும் சினத்தோடு, அவர்களது யோசனைகளை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.
மஹிந்த தம்மை நிராகரிக்கும் பட்சத்திலும் தாம் ரணிலை ஆதரிக்கப் போவதில்லை எனவும், மூன்றாவது நபர் ஒருவரையே தாம் ஆதரிக்கப் போவதாகவும் ஏலவே அறிவித்திருந்த ஹெல உறுமய, இம்முறை மஹிந்தவுடன் வெகு சிரத்தையோடு தொற்றிக் கொள்வதில் பிரயத்தனம் காட்டப் போவதில்லை என்றே தோன்றுகிறது.
மட்டுமன்றி, மஹிந்தவுக்கான மக்கள் செல்வாக்கு குறைந்து வரும் இத் தறுவாயில், அடுத்த பாராளுமன்றத் தேர்தலைக் கணக்கு வைத்து ஹெல உறுமய ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் பயணப்படவும் வாய்ப்பிருக்கிறது.
இம்முறை எவர், எக்கட்சி தம்மை விட்டு விலகிப் போனாலும் இன மற்றும் அடிப்படைவாதக் கொள்கைகளையுடைய கட்சிகள் தமக்கு தோள் கொடுக்கும் என்றே மஹிந்த அதிகம் எதிர்பார்த்திருந்திருக்கிறார்.
ஆயினும், ஹெல உறுமயவின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர் இம்முறை சிரத்தை காட்டியதாகவும் தெரியவில்லை.
வெகு லாவகமாக பெரும்பான்மை பெளத்தர்களின் வாக்குகளை தமக்காக சேகரிக்கும் ரத்ன தேரரின் பணியை, அவருக்கு ஒருபடி மேலே சென்று இம்முறை ஞானசார தேரர் செய்வார் என மஹிந்த நினைத்திருக்கவும் கூடும்.
இலங்கையில் அமையப் பெற்றிருக்கும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெளத்த விகாரைகளூடாக மஹிந்தவுக்கு 50 இலட்சம் பெளத்த வாக்குகளை தம்மால் பெற்றுக் கொடுக்க முடியும் என மேற்படி பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதற்கு ஏற்பவே, அண்மையில் வடக்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மஹிந்த, தமிழ் தேசியக் கூட்டமைப்பும், புலிகள் சார்பு டயஸ்பராவும் தனி ஈழக் கோரிக்கையைக் கைவிட்டால், தான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
தமிழர் தேசியக் கூட்டமைப்பும், அவதானிகளும் கூறியதுபோல, தனி நாட்டுக் கோரிக்கைக்கும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கும் தொடர்பில்லைதான். ஆயினும், முழந்தாலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடும் ஜனாதிபதியின் இந்த தந்திரம் தெற்கு பெரும்பான்மை பெளத்தர்களின் மனங்களை குளிர வைப்பதற்காகவும், அவர்களது வாக்குகளைப் பெறுவதற்காகவும் எடுத்த முயற்சி என்பதையும் மறுதலிக்க முடியாது.
மட்டுமன்றி, புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றிய தடை நீக்கத்தையும் ரணிலுக்கு எதிராகத் திருப்பிவிட்டு குளிர்காயும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறது ஆளுந்தரப்பு.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, எதிர்க்கட்சியை திணறடிக்க நினைத்த அரசாங்கம் தற்போது தான் வெட்டிய குழிக்குள் வீழ்ந்து, வெளியேற வழியறியாது தவிக்கின்றது
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசார மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகள் ஆளுங்கட்சியை விட முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதிலும், ஐ.தே.க அவசரமாகவும் அதேநேரம் மிகக் கவர்ச்சியான முறையிலும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதில் முனைப்புக் காட்டியிருப்பதிலும்கூட ஆளும்கட்சி தடுமாறிப் போயிருக்கிறது.
அதேநேரம், பொது மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு மீளவும் ஒரு நற்பெயரை எடுப்பது மிகவும் கடினமான விடயம் என உளவுத்துறை அறிக்கைகள் அரசுக்கு சுட்டிக் காட்டியுள்ளன.
அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் அமைச்சு அதிகாரியொருவர் எடுத்த கணக்கீட்டின் பிரகாரம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அமைச்சர் டியூ.குணசேக்கர குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமன்றி, மேற்படி தேர்தல் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அலரி மாளிகையில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்துக்கு, நாடளாவிய ரீதியில் நியமிக்கப்பட்டிருக்கும் 160 அமைப்பாளர்களில் 105 பேர் மட்டுமே வருகை தந்திருந்த நிலையில், 55 பேர் புறக்கணித்திருந்தமையும் வலுப்பெறும் அதிருப்தியின் வெளிப்பாடாகவே அமைந்திருக்கிறது.
இந்நிலையில், இதிலிருந்து வெளியேறுவதற்கான வழியாக ஆளுங்கட்சி ஆதரவு ஊடகங்கள் மூலம் தினந்தோறும் போலியான செய்திகளை உருவாக்கி, எதிர்க்கட்சிக்கு சேறுபூசும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதிலும் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகள் எதிர்க்கட்சிக்கு அளிக்கப்படுவதைத் தடுக்க,விடுதலைப் புலிகளுடன் எதிர்க்கட்சியை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என்று ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சேறு பூசும் விதத்தில் அச்சிடப்பட்ட போஷ்டர் தொகையொன்றுடன் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான (WPCA 5548) வாகனமொன்று நேற்று முன்தினம் அம்பாறை பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் பயணித்தவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் இலங்கையின் முக்கிய ஊடகமொன்று தெரிவித்திருந்தது.
இவ்வாகனத்தையும், வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட்ட நபர்களையும் உடனடியாக விடுவிக்கும்படி மேலிடத்தில் இருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி அச்செய்தி மேலும் தெரிவித்திருந்தது.
தவிர, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு மற்றும் அண்டிய பிரதேச அச்சக உரிமையாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து அவசர பேச்சு வார்த்தையொன்றை நடத்தியுள்ளார்.
இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலையொட்டி தமக்கான போஸ்டர்களை அச்சடித்துத் தரும்படி மேற்படி அச்சக உரிமையாளர்களிடம் உத்தரவு கலந்த கோரிக்கையை அவர் முன்வைத்ததாக லங்கா ட்ரூத் தெரிவித்துள்ளது.
இதற்கென இறக்குமதி செய்யப்படும் அச்சுத் தாள்களை துறைமுகத்தில் இருந்து நேரடியாக கொள்கல வாகனங்கள் ஊடாக குறித்த அச்சகங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இக்காலப் பகுதிக்குள் எதிர்க்கட்சி உட்பட்ட பிற கட்சிகளின் போஸ்டர்களை மேற்படி அச்சகங்கள் அச்சடிக்கக் கூடாது என ஜனாதிபதி அச்சக உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆக, அதிகாரக் கட்டமைப்புக்கள் மீது எவரும் கை வைக்காதவாறு பார்ப்பதற்கும், அவற்றை எவரும் தட்டிக் கேட்காதவாறு பார்ப்பதற்கும் முற்றிலும் தந்திரமும், நேர்த்தியும் மிக்க திரைமறைவு வலைகள் பின்னப்படத்தான் செய்கின்றன.
ஆயினும், அவற்றையும் தாண்டி இம்முறை எதிர்க்கட்சிகள் சமயோசிதமாகத் தப்பி முன்னேறும் வாய்ப்புள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளும், சிறு கட்சிகளும் ஆரம்பத்தில் வலியுறுத்திய “ பொது வேட்பாளரி”ன் தேவை தற்போது மறக்கடிக்கப்பட்டு, மஹிந்தவுக்குப் போட்டியாக பொது வேட்பாளராகவோ அல்லது தனி வேட்பாளராகவோ ரணில் விக்கிரமசிங்கதான் களமிறங்க வேண்டும் என்கிற சூழலும் தற்போது உருவாகியிருக்கிறது.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி தலைவர் சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார்.
நலிந்தவர் மீதும், எளிதில் இலக்காவோர் மீதும் அரசியல் வஞ்சம் தீர்ப்பது குதூகலமானது என்பதற்கமைய சரத் பொன்சேகாவின் குடியுரிமை பறிக்கப்பட்டு, வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்விடயத்தை அனுதாப அலைளாக மாற்றி, அனோமா பொன்சேகாவை களமிறக்க திட்டமிடப்பட்டிருந்த அக்கட்சி, ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை கலாசாரத்தின் மத்தியில் அனோமா பொன்சேக்கா தாக்குப்பிடிப்பது சாத்தியமில்லை என்று கருதியே இந்த முடிவை எடுத்திருக்கிறது.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதற்கும், அவரது வெற்றிக்காக பாடுபடவும் சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மட்டுமன்றி, சோபித தேரர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, மனோ கணேஷன் ஆகியோரும் ரணிலை ஆதரிக்க முன் வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது லண்டனில் இருக்கும் சந்திரிகா, அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாகவும், மங்கள சமரவீரவின் ஏற்பாட்டின் பிரகாரம் ரணிலின் மேடையில் அவர் உரையாற்றும் வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர் தேசிய கூட்டணியும் ரணிலை ஆதரிக்கும் வாய்ப்பு அதிகம் தென்படுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜே.வி.பியின் நிலைப்பாடு தற்போதைக்குத் தெரியவில்லையாயினும், அது மஹிந்தவை ஆதரிக்காது என்பது மட்டும் நிச்சயம்.
இந்நிலையில், மலையக அபிவிருத்தியை மையமாக வைத்து தாம் மஹிந்தவை ஆதரிக்கப் போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தேர்தல் அறிவிப்பின் பிற்பாடே தமது நிலைப்பாட்டை வெளியிடப் போவதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளபோதிலும், அது தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், அதற்குப் பிரதியுபகாரமாக அக்கட்சிக்கு வரப்பிரசாதங்களை அள்ளிக் கொடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளதாகவும் சில செய்திகள் தெரிவித்துள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
இதன் முதற்கட்டமாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ். தௌபீக், அஸ்லம் ஆகியோருக்கு பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தற்போதைய அமைச்சினை விட அதிகாரம் கூடிய அமைச்சுப் பதவியொன்றுக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
இவற்றோடு இணைந்ததாக கிழக்கு மற்றும் மேல் மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் இருவருக்கு அதிகாரமற்ற , வசதிவாய்ப்புகள் கொண்ட பதவிகள் வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரசின் மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பில் ராஜபக்ஷ குடும்பத்தின் பலம்வாய்ந்த அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தின் சார்பில் மேற்கண்ட உறுதிமொழிகளை வழங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் ஹக்கீம் மட்டக்களப்பில் போட்டியிடவுள்ளார். ஆளுங்கட்சியின் வேட்பாளர் அணித் தலைவர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எப்படியோ,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தேர்தல்களைப் போன்று மஹிந்தவுக்கு பெரும்பான்மை வெற்றியை பெறக்கூடிய வாய்ப்பு இல்லையென்றும் ஆங்கில செய்தித்தாள் ஒன்று கணக்கீடு செய்துள்ளது.
இதன்படி மஹிந்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட வேண்டுமானால் அவருக்கு 50.1வீத வாக்குகள் அவசியம். ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ள 110 இலட்சம் வாக்காளர்களில் இருந்து இந்த தொகை அவருக்கு கிடைக்க வேண்டும்.
அதாவது மஹிந்த வெற்றிப்பெற வேண்டுமானால் சிங்கள பௌத்த வாக்காளர்களான 74 வீத வாக்காளர்களில் (80 இலட்சம் வாக்காளர்கள்) இருந்து 55 இலட்சம் வாக்குகளை அவர் பெறவேண்டும்.
எனினும் பொதுபலசேனாவுடன் இணைந்து செயற்படுவதால் இது சாத்தியமானதல்ல என்று கருதப்படுகிறது.
2005ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்க 47 இலட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறார்.
எனவே ஐக்கிய தேசியக்கட்சிக்கு அடிப்படையில் 40 இலட்சம் வாக்குகள் உள்ளன. அத்துடன் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் வாக்குகளை மஹிந்தவை காட்டிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில் 26 வீத வாக்காளர்கள் (30 இலட்சம் வாக்காளர்கள்) சிறுபான்மையினராக உள்ளனர். இதில் 1.5 வீதமானோர் வாக்களித்தாலே ரணில் விக்கிரமசிங்கவுக்கு 55 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும். மஹிந்த ராஜபக்ஷவை பொறுத்தவரையில் இம்முறை அது இலகுவான இலக்காக இருக்காது எனவும் குறித்த கணக்கீடு தெரிவித்துள்ளது.
எப்படியோ, உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு ஆளுந்தரப்பை விடவும் இம்முறை எதிரணிக்கான ஆதரவு பெருக்கெடுக்கும் என்றே படுகிறது. (நிறைவு) Nawamani Weekly 2009

No comments:
Post a Comment