2015ல் இனக்கலவரம் வெடிக்கும் என்கிற அச்சத்தில் முஸ்லிம்கள்!
- மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கறைபடிந்த, கறுப்பு வருடமொன்று இருக்குமென்றால், அது கசப்பான... துன்பவியல் சம்பவங்கள் நிகழ்ந்தேறிய 1915 தான் என்பதை எவராலும் என்றுமே மறுக்கமுடியாது
இலங்கையில் இந்த 1915 மே மாதம் 28 ல்தான் மிலேச்சத்தனமான, முஸ்லிம்களுக்கு எதிரான முதல் இனக்கலவரம்வெடித்திருந்தது.
1883 மார்ச் 25ல் பெளத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையில் ஓர் இனக்கலவரம் உசுப்பேற்றப்பட்டு, அதில் இருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தும் அக்கலவரம் குறிப்பிட்ட கொழும்பு- கொட்டாஞ்சேனை எல்லையைவிட்டு வெளிப்பரவாத நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான1915 கலவரத்தையே இலங்கையின் பாரிய, முதல் இனக்கலவரமென ஆய்வாளர்கள் வர்ணிக்கிறார்கள்.
பத்து தசாப்தகாலமாகியும் இன்னமும், தொண்டைக்குழியில் சிக்கிய மீன்முள்ளாய் உறுத்தத்தான் செய்கிறது முஸ்லிம்கள் கொலைக்களம் கண்ட 1915.
வரலாற்றைப் படிக்கும்போதே நெஞ்சை அடைக்கிறது.
இத்தனை பாரதூரமான, ஈவிரக்கமற்றதோர் இனக்கலவரத்தை இதுவரைக்கும் இலங்கை கண்டிருக்கவில்லை..
1983கறுப்பு ஜூலையை விடவும் இது பயங்கரமாக இருந்ததென்பது பலர் அறியாததொன்று.
கம்பளை பள்ளிவாசலில் துவங்கிய மேற்படி 1915 இனக்கலவரம் கண்டி, கம்பளை, புத்தளம் போன்ற பகுதிகளுக்கும் மிக வேகமாகப்பரவியது. கண்டி காசல்ஹில் பள்ளிவாசலிலும்அது உக்கிரம் கொண்டமர்ந்தது.
இன்றைய இலங்கையைப்போல அப்போது இலங்கையின் பல பிரதேசங்களிலும் பெருத்த பெளத்தவிகாரைகள் காணப்படவில்லை..ஆனால், பல பிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாயல்கள் அமைந்திருந்தன.
இறைச்சிக்கடைகள்,தையல்கடைகள்,தேநீர்க்கடைகள் என்று அன்றைய இலங்கையின் நகர்ப்பிதேச வர்த்தகத்துறையில் அதிகமதிகம் முஸ்லிம்களே கோலோச்சிக் கொண்டிருந்தனர்.
முக்கியமான ஆய்வாளர்களின் கருத்துப்படி (இதில் பிரதானமானவர் குமாரி ஜெயவர்தன.1931ல் பிறந்த இவர் 1955ல் அரசியல் துறையில் லண்டனில் முதுமானிப் பட்டம்பெற்ற கையோடு,1958ல் பரிஸ்டர் பட்டமும்,1964ல் இலங்கை தொழிலாளர் அமைப்பு தொடர்பில் கலாநிதிப் பட்டமும்பெற்றவர்.பல புத்தகங்களை எழுதிய சிறந்தஆய்வாளர்.);
1880 காலப்பகுதியில் கொழும்பு,புறக்கோட்டை வர்த்தகம் 64 முஸ்லிம் வர்த்தகர்களின் கட்டுப்பாட்டிலும்,86 செட்டியார்களின் கரங்களிலும் இருந்தததாகத் தெரியவருகிறது.
அப்போதைய முழு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரமும் ஏழு போரா முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்ததோடு,அவர்கள் சொந்தமாக கப்பல்களையும் வைத்திருந்ததாகக் குறிப்பிடும் குமாரிஜெயவர்தன,கொழும்பில் மட்டுமன்றி அப்போதைய இலங்கையின் பல பிரதேசங்களிலும் வர்த்தகத்துறையில் முஸ்லிம்களே முன்னணியில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார்.
அப்போதைய பெளத்தர்களை விடவும் முஸ்லிம்கள் வசதிமிக்கவர்களாக இருந்தார்கள் என்பதும், சிங்களவர்கள் மிக வறுமைப்பட்டவர்களாகவும் பாதையோரங்களில் வெற்றிலை வியாபாரம் செய்பவர்களாகவும் இருந்து வந்தார்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்றைய முஸ்லிம்களின் பல்துறைவளர்ச்சி வேகத்தைக் கட்டுபடுத்த அல்லது மழுங்கடிக்க இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்கள்மீது மேற்கொள்ளும் அடாவடித்தனங்களுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் ஏற்பவே அன்றைய அப்பாவி சிங்கள சமூகம் உசுப்பேற்றப்பட்டதில்தான் 1915 இனக்கலவரம் வெடித்தது.
இந்தக் கலவரத்தில் 4075 வீடுகளும், வர்த்தக நிறுவனங்களும் கொள்ளையடிக்கப்பட்டதோடு, 350க்கும் மேற்பட்ட கடைகள் எரித்துச் சாம்பராக்கப்பட்டன.
பதினேழு பள்ளிவாயல்கள் தீக்கிரையாக்கப்பட்டு மேலும் 86 பள்ளிவாயல்கள் மீது கடுமையான தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. நான்கு பெண்கள் கற்பழிக்கப்பட்ட கொடூரத்தோடு, இக்கலவரத்தில் 25 பேர் கொல்லப்பட்டு,மேலும் 189 பேர் காயங்களுக்குள்ளானதாகவும் தெரியவருகிறது.
முஸ்லிம்களுக்கு எதிரான இன்றைய பேரினவாதிகளைப்போல அன்றைய அநகாரிகதர்மபால(1864 – 1933) போட்ட தூபம்தான் மேற்படி கலவரம் கொளுந்து விட்டெரிந்ததற்குக் காரணம் என்பது எவராலும் மறுதலிக்க முடியாதது.
முஸ்லிம்களை யூதசைலொக்கள் என்றும், இந்தியாவில் இருந்து வந்த இந்த முஸ்லிம்கள் அப்பாவி சிங்களவர்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து வசதியான ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாகவும் மேற்படி 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய பெளத்த அடிப்படைவாதி பிரசாரம் செய்ததிலேயே அப்போதைய சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள்.
தற்போதைய ரோயல் கல்லூரியான அப்போதைய கொழும்பு அகடமியில் கல்விகற்ற இந்த ஹேவாவித்தாரன பிறகொரு சந்தர்ப்பத்திலேயே தனது பெயரை அநகாரிக தர்மபால என்று மாற்றிக்கொண்டார்.

தர்மபால என்றால் ‘தர்மதேசத்தின் காவலர்’ என்றும், அநகாரிக என்றால் ;இருப்பிடம் துறந்தவர்’ என்றும்அர்த்தம்.
பெளத்தமத எழுச்சியை உயிர் மூச்சாகக் கொண்டிருந்த இவரது மனோபாவமே மேற்படி 1915 கலவரத்திற்கு வித்திட்டதெனலாம்..
இதே மனோபாவத்திற்கு உட்பட்ட அமைப்புகளாகத்தான் இன்றைய பொதுபலசேனாவும், சிங்களராவயவும் அரிதாரம் பூசிக்கொண்டுள்ளன.இந்த அமைப்பு சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அரசியல்வாதிகளின் அங்கீகாரமும்,வசதிகளும் முஸ்லிம்களின் நிகழ்கால நியாயபூர்வ அச்சத்தை மேலும் ஒருபடி அதிகரிக்கச் செய்திருக்கின்றன.
ஹலால் விவகாரம் தொட்டு இன்று இவர்கள் முஸ்லிம்களை அடிவேரறுக்கப் பகிரங்கமாகப் புறப்பட்டிருப்பதிலும் சரி, நிஜ யுத்தத்தைவிடக் கொடூரமான மவுன யுத்தத்தின் ரகசியத் திட்டமிடுதல்களிலும் சரி….சகலமும் அறிந்த அரசு மவுனமாகவும் பொறுப்புக் கூறாமலும் இருப்பதில் இந்த ஐயப்பாடு பன்மடங்குகளாகவே அதிகரிக்கிறது.
முதலாம் உலகப் போர்ச்சூழ்நிலை காரணமாக, குறித்த 1915 கலவரம் பெரும்அழிவுகளைக் கொண்டு வருவதற்குள் அப்போதைய அதிகாரத்தில் இருந்த பிரித்தானியா அதை அடக்கியது.
ஆனால்,இன்றோ அடக்க வேண்டிய அதிகாரம் படைத்தவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையே தொடர்வதில்,முஸ்லிம்களின் இருப்பும்,வாழ்வாதாரமும் கேள்விக் குறியாகவே இருந்துகொண்டிருக்கிறது.
மாவனல்லை,பதுளை,ஹொரதொடுவ, தர்காநகர்,அளுத்கம,கன்னத்தோட்டை,பேருவளை என நாளுக்கு நாள் பேரினவாதிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் முஸ்லிம் பிரதேசங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
முஸ்லிம்களின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது…. பள்ளிவாயல்கள் தாக்கப்படுகின்றன….. அருவெறுப்பான வார்த்தைகளால் இஸ்லாமிய மார்க்கம் நிந்திக்கப்படுகிறது…... குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து லாவகமாக என்றில்லாமல் மிக இயல்பாகத் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்..….
எப்படியோ முஸ்லிம்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஆரோக்கியமான சூழலை இழந்து கொண்டிருக்கின்றோம்.
இந்நிலைமை தொடர்ந்து,
மீளவும் இலங்கை வாழ் முஸ்லிம்களை ‘யூத சைலொக்களாக’க் காட்டும் முயற்சிகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இப்படி….பேரினவாதிகள் பெரும்பான்மைச் சமூகத்தை மூளைச்சலவை செய்து தம்பக்கம் ஒரு தொகையினரை இழுத்துக்கொள்ள நேரிடும் பட்சத்தில், கொடிய 1915 கலவரத்தின் நூற்றாண்டு விழாவை எதிர்வரும் 2015ல் அவர்கள் நமது முஸ்லிம்களின் உயிர்கள் மீதும் உடைமைகள் மீதும்தான் கொண்டாட எத்தனிப்பார்கள் என்றே தோன்றுகிறது..
ஆயினும்,இந்த நியாய அநியாயங்களின் தீவிரத்தையோ...சிறுபான்மையை இலக்கு வைத்து அடிக்கடி மாற்றங்களுக்குள்ளாகும் அரசாங்கத்தின் தந்திரோபாயங்களையோ உணறும் மனோநிலையில் நம்மில் பலபேர் இல்லையென்பதுதான் துர்பாக்கியம்
எப்படியோ, முஸ்லிம் தலைமைகள் அரசின் பாதுகாவலர்களாகத் தான் தம்மைக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
"முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் வன்முறைகள் தொடர்பில் விளக்குவதற்கு எவருமே முன்வரவில்லை" என்று நவநீதம்பிள்ளையே கோடிட்டுக்காட்டும் அளவில் முஸ்லிம் தலைமைகள் மவுனமாகத்தான் இருந்திருக்கின்றன. இருக்கின்றன.
தீக்குச்சி தீண்டாமல்... உரசாமல் தீப்பொறி பறப்பதில்லை.
நமக்கான தீக்குச்சிகளோ அச்சத்தில் நனைந்து உறைந்து கிடக்கின்றன.

2014 ஜூன், நவமணி வாரயிதழ்

No comments:
Post a Comment